நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டுக் காவல் விவகாரத்தில் நஜிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும்: கிம்மா தலைவர் செய்யது இப்ராஹிம்

கோலாலம்பூர்:

வீட்டுக் காவல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கிம்மா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ செய்யது இப்ராஹிம் கூறினார்.

டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வீட்டுக் காவல் வழங்குவதற்கான கூடுதல் உத்தரவை முன்னாள் மாமன்னர் வழங்கினார்.

இக்கூடுதல் உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதன் பின் இருக்கிறது என்று இப்போது கூறப்படுகிறது.

தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நாட்டில் உச்சப்பச்ச அதிகாரத்தை கொண்டிருப்பவர் மாமன்னர். அவரின் உத்தரவுக்கு பதில் ஏதும் இல்லை.

அப்படிப்பட்ட மாமன்னரின் உத்தரவுக்கான கடிதம் இன்று மறைக்கப்பட்டுள்ளது. 

அதே வேளையில் சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு கிடைக்க வேண்டிய நீதியும் மறுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தில் நஜிப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். 

மேலும் மாமன்னரின் கூடுதல் உத்தரவை மறைத்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் கிம்மா டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு முழு ஆதரவு வழங்கும் என்று டத்தோஸ்ரீ செய்யது இப்ராஹிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset