நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இசை நிகழ்ச்சிகளில் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்வது நடைமுறைக்கு மாறானது: ருஸ்லின் ஜூசோ

காஜாங்: 

இசை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் சிறுநீர் பரிசோதனைகளைச் செயல்படுத்துவது நடைமுறைக்கு மாறானது என்றும் செயல்படுத்துவது கடினம் என்றும் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.

போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைக் கண்டறிய சிறுநீர் பரிசோதனை கவனமாக செய்யப்பட வேண்டும் என்பதாலும், அதை முடிக்க நேரம் எடுப்பதாலும் இதனைச் செயல்படுத்துவது கடினம் என்று அவர் குறிப்பிட்டார். 

ஆனால் இசை நிகழ்ச்சிகள் ஒரு பெரிய அரங்கத்தில் நடைபெறுகின்றன. அதனால் சீரற்ற சோதனைகளை நடத்த முடியாது

பங்கேற்புள்ள அனைவருக்கும் சோதனைகளை மேற்கொள்வது எங்களுக்கு மிகவும் நடைமுறைக்கு மாறானது என்று அவர் இன்று தேசிய போதைப்பொருள் தலைமையகத்தில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.

இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரச்சாரச் செய்திகளை ஊக்குவிப்பதிலும், அதன் இருப்பு மற்றும் அமலாக்க முயற்சிகளை அதிகரிப்பதிலும் தனது தரப்பு அதிக கவனம் செலுத்துவதாக ருஸ்லின் கூறினார்.

சிறந்த தீர்வைக் கண்டறிய இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைச் சந்திப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset