செய்திகள் மலேசியா
அரசாங்கக் கொள்கைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வெளிப்புற மக்கள் தொடர்பு நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தினேன்: நஜிப் ரசாக்
புத்ரா ஜெயா:
அரசாங்கக் கொள்கைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வெளிப்புற மக்கள் தொடர்பு நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2011-ஆம் ஆண்டு மற்றும் 2014-ஆம் ஆண்டுக்கு இடையில் பல நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தப்பட்டதாக நஜிப் கூறினார். அவை:
1. பேசுவதற்கான உள்ளடக்கத்தைத் தயார் செய்யும் சேவைகளுக்காக Semarak Konsortium Satu Sdn Bhd நிறுவனத்திற்கு RM22 மில்லியன் செலுத்தப்பட்டது
2. தனது சமூக ஊடகங்களை நிர்வகிப்பதற்காக OOrb Solutions Sdn Bhd நிறுவனத்திற்கு RM2 மில்லியன்
3. நஜிப்பின் சீன மொழி முகநூல் பக்கம் மற்றும் சீன சமூகத்தை இலக்காகக் கொண்ட வெளியீடுகளை நிர்வகிக்கும் இரண்டு நிறுவனங்களுக்கு இடைத்தரகரான லிம் சூன் பெங்கிற்கு RM246,000
இந்தத் தொகைகளுக்கான காசோலைகள் நஜிப்பின் கணக்குகளிலிருந்து நேரடியாக வழங்கப்பட்டன.
அரசாங்கக் கொள்கைகள் குறித்த செய்திகளைப் பொதுமக்களுக்கு அனுப்ப எனக்கு வேறு தளம் தேவைப்பட்டது என்று அவர் கூறினார்.
பிரதான ஊடகங்களால் மட்டுமே அரசாங்கக் கொள்கைகள் அனைத்தையும் மக்களுக்குத் தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.
பின்னர் அரசு துணை வழக்கறிஞர் கமல் பஹாரின் உமர், பிரதமர் அலுவலகம் இதே போன்ற பணிகளைச் செய்ய முடியுமா என்று நஜிப்பிடம் கேள்வி எழுப்பினார்.
சமூக ஊடக மேலாண்மைக்கு பிரதமர் அலுவலகம் வழங்கக் கூடியதை விட நிபுணத்துவம் தேவை என்று நஜிப் நீதிமன்றத்தில் கூறினார்.
லிம்முக்கு வழங்கப்பட்ட RM246,000 சீன சமூகத்திற்குள் அவரது தனிப்பட்ட பிம்பத்தை உயர்த்துவதற்காக வழங்கப்பட்டது என்பதையும் நஜிப் மறுத்தார்.
நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா முன் விசாரணை தொடர்கிறது.
பிப்ரவரி 2011 மற்றும் டிசம்பர் 2014-க்கு இடையில் தனது AmBank கணக்குகளில் செலுத்தப்பட்ட செய்யப்பட்ட RM2.28 பில்லியன் நிதி தொடர்பாக அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி செய்தல் ஆகிய 25 குற்றச்சாட்டுகளின் பேரில் நஜிப் விசாரணையை எதிர்கொள்கிறார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 14, 2025, 7:07 pm
கைரி மீதான விசாரணை ஆவணங்கள் விரைவில் பூர்த்தியாகும்: ஐஜிபி
January 14, 2025, 6:35 pm
அமைச்சரின் மகன் அண்டை நாட்டில் திருமணம் செய்து கொண்டது நண்பர்களுக்கு கூட தெரியாது: ஐஜிபி
January 14, 2025, 6:16 pm
வீட்டுக் காவல் விவகாரத்தில் நஜிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும்: கிம்மா தலைவர் செய்யது இப்ராஹிம்
January 14, 2025, 3:39 pm
7 முக்கிய மருத்துவமனைகளில் இணைய வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது: தியோ நீ சீங்
January 14, 2025, 2:38 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் மஇகாவின் பொங்கல் விழா: விமரிசையாக நடைபெற்றது
January 14, 2025, 2:37 pm
2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 10 திட்டங்கள் அறிவிக்கப்படலாம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2025, 2:01 pm