நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

 5 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாகப் பிரதமர் அன்வார் இங்கிலாந்து செல்கின்றார்

கோலாலம்பூர்:

ஐரோப்பாவில் மலேசியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியான இங்கிலாந்துக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 5 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்கின்றார். 

இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் அன்வாரின் பயணம் இருப்பதாக இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான மலேசியத் தூதர் டத்தோ ஜக்ரி ஜாபர் கூறினார்.

பிரதமரான பிறகு அன்வாரின் முதல் இங்கிலாந்து வருகை இதுவாகும். 

ஆசியான் தலைவராகப் பிரதமர் ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வப் பயணமும் இதுவாகும் என்று அவர் மேலும் கூறினார்.

தனது அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜக்ரி, பிரதமரின் இந்தப பயணம் புதிய உயிர்ப்பிக்கும் என்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மலேசியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மைக்கான விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்தத்தில் (CPTPP) இங்கிலாந்து பங்கேற்றதைத் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டில் புதிய முயற்சிகளை ஆராயவும் இது முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்

நாளை புதன்கிழமை அன்வார் ஸ்டார்மரை சந்திப்பார். மேலும் இரு தலைவர்களும் பல்வேறு இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் மியான்மர் மற்றும் பாலஸ்தீனத்தின் நிலைமை குறித்து பேசுவார்கள் என்று ஜக்ரி கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் இஸ்ரேலுக்கு சில ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்தி வைத்துள்ளது மற்றும் காசா மற்றும் மேற்குக் கரைக்கு விரைவான மனிதாபிமான உதவியைக் கோரியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset