செய்திகள் மலேசியா
பொங்கல் உங்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி, செழிப்பு வெற்றியைக் கொண்டு வரட்டும்: செனட்டர் சரஸ்வதி
கோலாலம்பூர்:
2025ஆம் ஆண்டு பொங்கல் உங்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி, செழிப்பு வெற்றியைக் கொண்டு வரட்டும்.
தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் இதனை கூறினார்.
அனைத்து மலேசியத் தமிழர்களுக்கும் எனது இதயம் கனிந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
பொங்கல் பண்டிகை நன்றியுணர்வு, செழிப்பு, புதிய தொடக்கங்களைக் குறிக்கும் ஒரு பண்டிகையாகும்.
கடினமாக உழைப்பதன் முக்கியத்துவத்தையும், நமது முயற்சிகளின் பலன்களைப் பாராட்டுவதையும், குடும்ப உறவுகளையும் சமூகத்தில் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.
மலேசியா கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு, பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவது நம் அனைவரிடையேயும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துகிறது.
தேசிய ஒற்றுமையின் தூணாக இருக்கும் பன்முகத்தன்மையை நாம் தொடர்ந்து மதித்து கொண்டாடுவோம்.
இந்தப் பண்டிகை, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றிகளை கொண்டுவர வாழ்த்துகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2025, 7:07 pm
கைரி மீதான விசாரணை ஆவணங்கள் விரைவில் பூர்த்தியாகும்: ஐஜிபி
January 14, 2025, 6:35 pm
அமைச்சரின் மகன் அண்டை நாட்டில் திருமணம் செய்து கொண்டது நண்பர்களுக்கு கூட தெரியாது: ஐஜிபி
January 14, 2025, 6:16 pm
வீட்டுக் காவல் விவகாரத்தில் நஜிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும்: கிம்மா தலைவர் செய்யது இப்ராஹிம்
January 14, 2025, 3:39 pm
7 முக்கிய மருத்துவமனைகளில் இணைய வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது: தியோ நீ சீங்
January 14, 2025, 2:38 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் மஇகாவின் பொங்கல் விழா: விமரிசையாக நடைபெற்றது
January 14, 2025, 2:37 pm
2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 10 திட்டங்கள் அறிவிக்கப்படலாம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2025, 2:01 pm
இசை நிகழ்ச்சிகளில் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்வது நடைமுறைக்கு மாறானது: ருஸ்லின் ஜூசோ
January 14, 2025, 1:14 pm