நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன் அளித்ததற்கு பதிலடியாக வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன் வழங்கியது

புது டெல்லி: 

வங்கதேச பொறுப்புத் தூதர் முஹம்மது நூரல் இஸ்லாமுக்கு இந்தியா சம்மன் அளித்தது.

இந்தியா - வங்கதேச எல்லையின் 5 இடங்களில் ஒப்பந்தத்தை மீறி இந்தியா வேலி அமைக்க முயற்சிப்பதாக வங்கதேசம் குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக இந்திய தூதர் பிரணாய் வர்மாவை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் அழைத்து விளக்கம் கேட்டதோடு சம்மன் அளித்தது.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் எல்லை வேலி விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு தில்லியில் வங்கதேச பொறுப்புத் தூதர் முஹம்மது நூரல் இஸ்லாமுக்கு சம்மன் அனுப்பியது.

அவரிடம், இந்தியா - வங்கதேச எல்லையில் வேலி அமைத்தல் உள்ளிட்ட  அனைத்து விதிமுறைகள்  பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset