நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக் மாநிலத்தில் எம்.ஐ.இ.டி யின் கல்விக்கடனுதவி, உபகாரநிதி உயர்கல்வி வழங்கப்பட்டு வருகிறது: டான்ஸ்ரீ இராமசாமி

ஈப்போ:

பேராக் மாநிலம் முழுவதும் ம இ கா வின் எம்.ஐ.இ.டி கல்வி கடனுதவி மற்றும் உபகார நிதி வழங்கும் திட்டம் இம்மாநிலம் முழுவதும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த இரு நாட்களாக உயர்கல்வி பயிலும் 12 மாணவர்களுக்கு 4 இலட்சத்து 36 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டதாக பேராக் மாநில ம இ கா தலைவரும், ம இ கா வின் தேசிய உதவித்தலைவருமாகிய டான்ஸ்ரீ எம். இராமசாமி கூறினார்.

கல்வி மட்டுமே ஒரு சமுதாயத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு் செல்ல முடியும். அதன் அடிப்படையில் ம இ கா கல்வித்துறைக்கு முன்னுரிமையும், முக்கியதுவமும் வழங்கி வருகிறது.

அதன் பொருட்டு, பேராக் மாநிலத்தில் தொகுதி வாரியாக சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவியை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கப் பல்கலைக்கழகங்களில், தனியார் உயர்கல்வி நிலையங்களில் பயின்றுவரும் மாணவர்களுக்கு பாகுபாடின்றி நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விவகாரத்தில் பி40 குடும்ப மாணவர்களுக்கு முன்னுரிமையும் அவர்களின் குடும்ப நிலைப்பாடும் ஆய்வு செய்து அதன் பின் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

பேராக் மாநிலத்தில் இதுவரை பாகான் டத்தோ, தெலுக் இந்தான், பத்துகாஜா,ஈப்போ தீமோர், ஈப்போ பாராட், கோலகங்சார், சுங்கை சிப்புட், தம்புன், தைப்பிங், புக்கிட் கந்தாங் ஆகிய தொகுதிகளில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.

இனிவரும் காலங்களில் இத்தகைய கல்வி நிதியுதவி ஒவ்வொரு மாதமும் தொகுதி வாரியாக வழங்கப்பட்டுவருகிறது.

ம இ கா வால் செயல்பட்டு வரும் ஏம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட இவ்வுதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்நாட்டு இந்திய சமுதாய கல்வி வளர்ச்சிக்காக இதுவரை சுமார் 25 கோடி ரிங்கிட் கல்வி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதை அவர் கோடிக்காட்டினார்.

ம இ கா வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தின் கீழ் இந்திய சமூக மேம்பாட்டிற்கு உதவிகளும், சேவைகளும் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து திவெட் தொழிற்கல்வி விழிப்புணர்வு குறித்து இந்திய சமுதாயத்தை சென்றடைய ம இ கா உன்னதமாக செயல்படும்.

இந்த திவெட் தொழிற்கல்வியின் நன்மைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய முழு தகவலையும் இந்திய பெற்றோர்கள், அவர்களது பிள்ளைகளுக்கு சென்றடைய பேராக் ம இ கா தங்கள் சேவையை துரிதப்படுத்துவார்கள் என்று அவர் உறுதியளித்தார்.

அண்மையில்  தீ விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு பேராக் மாநில ம.இ.கா தலைவரும் தேசிய ம.இ.கா உதவித் தலைவர் என்ற அடிப்படையில் நேரடி வருகை மேற்கொண்டு பார்வையிட்டதாக அவர் தெரிவித்தார்.

தீ விபத்தின் பாதிப்புகள் குறித்து பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர்  விளக்கமளித்தார். பள்ளியின்  தேவைகள், சீரமைப்பு பணிகள் மற்றும் மாணவர் கல்விக்கான உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதே வேளையில், தோட்டக் குடியிருப்பாளர்களுடன் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும்  கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, பெருவாஸ் தொகுதியில் பாடாங் சிராய் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 21 இந்திய குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பேராக் ம இ கா நேரடியாக  தேவையான உதவிகள் செய்ததாக டான்ஸ்ரீ எம். இராமசாமி தெளிவுப்படுத்தினார்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset