நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய நீரோட்டத்தில் இருந்து இந்திய சமூகம் விடுபடாது: பொங்கல் வாழ்த்து செய்தியில் பிரதமர் உறுதி

புத்ராஜெயா:

தேசிய  நீரோட்டத்தில் இருந்து  இந்திய சமூகம் விடுப்படாது என்று பொங்கல் வாழ்த்து செய்தியில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக இன்று தொடங்கி நான்கு நாள்களுக்குத் தமிழர்கள் அனைவரும் பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாடவிருக்கின்றனர். 

தமிழ் நாள்காட்டியின்படி (திருவள்ளுவர் ஆண்டு) தை மாதத்தின் தொடக்கமாக இந்தப் பொங்கல் விழா வரவேற்கப்படுகின்றது.

எனவே, இந்த ஆண்டு பொங்கல் விழாவைக் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் மிகவும் மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் அனைவரும் கொண்டாட வேண்டும்.

அரசாங்கத்தின் தரப்பில், குறிப்பாக இந்தியர்கள் உட்பட எந்தவொரு சமூகத்தினரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறோம். அவர்கள் விடுபட மாட்டார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

இந்தியர்களிடையே நிலவும் வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும்.

அதன் அடிப்படையில் நாட்டில் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என நான் பெரிதும் நம்புகிறேன்.

மலேசியக் குடும்பத்தின் சார்பாக, குறிப்பாக தமிழ் சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து இந்திய சமூகத்தினருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டினையும், பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset