செய்திகள் மலேசியா
நம்பிக்கை உணர்வை வலுப்படுத்தி, பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
சுங்கைப்பூலோ:
இந்த ஆண்டு பொங்கல் விழா நாட்டிற்கும் இந்திய சமூகத்திற்கும் உற்சாகமூட்டும் செழிப்பு, நல்வாழ்வு, மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய வளர்ச்சி செயல்முறைக்கு ஏற்ப வெற்றிகரமான சமூகமாக முன்னேற இந்திய சமூகம் தங்களிடையே ஒற்றுமையின் சக்தியை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
பொங்கல் நம் அனைவருக்கும் ஓர் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம், கல்வி, பிற துறைகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும் இந்திய சமூகத்தின் நம்பிக்கைகளை ஒழுங்கமைக்கப்பட்ட, திட்டமிட்ட முறையில் கட்டியெழுப்ப முடியும்.
இதை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட நான் அன்போடு அழைக்கிறேன் இந்திய சமூகத்தின் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.
தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப, சமூகம் மேலும் வளமாகவும் வெற்றிகரமாகவும் இருக்க இந்த பொங்கல் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.
இவ்வேளையில் பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்.
மகிழ்ச்சியுடன் இந்த பொங்கலை வரவேற்கிறோம். நம்பிக்கை என்ற வலுவான மனப்பான்மை நிச்சயமாக நம் அனைவருக்கும் வெற்றியைத் தரும் என்று டத்தோஶ்ரீ ரமணன் தனது வாழ்த்து செய்தியில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2025, 7:07 pm
கைரி மீதான விசாரணை ஆவணங்கள் விரைவில் பூர்த்தியாகும்: ஐஜிபி
January 14, 2025, 6:35 pm
அமைச்சரின் மகன் அண்டை நாட்டில் திருமணம் செய்து கொண்டது நண்பர்களுக்கு கூட தெரியாது: ஐஜிபி
January 14, 2025, 6:16 pm
வீட்டுக் காவல் விவகாரத்தில் நஜிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும்: கிம்மா தலைவர் செய்யது இப்ராஹிம்
January 14, 2025, 3:39 pm
7 முக்கிய மருத்துவமனைகளில் இணைய வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது: தியோ நீ சீங்
January 14, 2025, 2:38 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் மஇகாவின் பொங்கல் விழா: விமரிசையாக நடைபெற்றது
January 14, 2025, 2:37 pm
2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 10 திட்டங்கள் அறிவிக்கப்படலாம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2025, 2:01 pm
இசை நிகழ்ச்சிகளில் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்வது நடைமுறைக்கு மாறானது: ருஸ்லின் ஜூசோ
January 14, 2025, 1:14 pm