செய்திகள் மலேசியா
2025 பொங்கல் திருநாள் இந்திய சமுதாயத்திற்கு மறுமலர்ச்சியை தர வேண்டும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
2025 பொங்கல் திருநாள் மலேசிய இந்திய சமுதாயத்தின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக அமைய வேண்டும்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தமது பொங்கல் வாழ்த்து செய்தியில் இவ்வாறு கூறினார்.
இந்திய சமுதாய மக்கள் ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றியடை வேண்டும்.
அதேவேளை, நம் சமுதாயத்திற்கு இன்றைய அவசியத் தேவை ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் என்பதால், நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒருமித்து செயல்படுவதில் அக்கறை கொள்ள வேண்டும்.
அரசியல் ரிதியாக, மலேசிய இந்தியர்கள் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும் சமூக அளவில் நாம் ஒற்றுமையுடன் திகழ்ந்தால்தான், சமுதாயம் பயனடையும்.
இந்திய சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மஇகா என்றும் தவறியதில்லை.
குறிப்பாக, இந்தியர்களின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கு மஇகா என்றென்றும் பாடுபடும்.
அதற்கான கடப்பாட்டையும் ஈடுபாட்டையும் மஇகா ஒருபோதும் கைவிட்டதில்லை.
எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமுதாயமாக நம் சமுதாயம் மலர வேண்டுமென்றால், கல்வி மறுமலர்ச்சி ஒன்றுதான் துணையாக அமையும்.
அந்த இலக்கைநோக்கிதான் மஇகா நீண்ட காலமாக பயணிக்கிறது. அதற்கு ஏதுவாக டேஃப் கல்லூரியும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும் திட்டங்களை வகுத்து செயற்படுத்துகின்றன.
எது எவ்வாறாயினும் இந்தப் பொங்கல் திருநாள், மலேசிய இந்திய சமுதாயத்திற்கான அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் முன்னேற்றத்தையும் மறுமலர்ச்சியையும் அளிக்க இறையருள் துணை நிற்கும்படி வேண்டிக் கொள்வதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2025, 7:07 pm
கைரி மீதான விசாரணை ஆவணங்கள் விரைவில் பூர்த்தியாகும்: ஐஜிபி
January 14, 2025, 6:35 pm
அமைச்சரின் மகன் அண்டை நாட்டில் திருமணம் செய்து கொண்டது நண்பர்களுக்கு கூட தெரியாது: ஐஜிபி
January 14, 2025, 6:16 pm
வீட்டுக் காவல் விவகாரத்தில் நஜிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும்: கிம்மா தலைவர் செய்யது இப்ராஹிம்
January 14, 2025, 3:39 pm
7 முக்கிய மருத்துவமனைகளில் இணைய வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது: தியோ நீ சீங்
January 14, 2025, 2:38 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் மஇகாவின் பொங்கல் விழா: விமரிசையாக நடைபெற்றது
January 14, 2025, 2:37 pm
2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 10 திட்டங்கள் அறிவிக்கப்படலாம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2025, 2:01 pm
இசை நிகழ்ச்சிகளில் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்வது நடைமுறைக்கு மாறானது: ருஸ்லின் ஜூசோ
January 14, 2025, 1:14 pm