நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாமான் மேடான், ஸ்ரீ செத்தியாவில் 1,600 பேருக்கு பொங்கல் பானைகள், பால் வழங்கப்பட்டன: அசோகன்

பெட்டாலிங் ஜெயா:

தாமான் மேடான், ஸ்ரீ செத்தியா வட்டரத்தைச் சேர்ந்த 1,600 பேருக்கு  பொங்கல் பானைகள், பால் வழங்கப்பட்டன.

தாமான் மேடான் வட்டாரத்திற்கான இந்திய சமூகத் தலைவர் அசோகன் சுப்ரமணியம் இதனை கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய சமூகத் தலைவராக பொறுப்பேற்றது முதல் மக்களுக்குச் சமூகநல உதவிகள், மாற்றுத் திறனாளிகள் அட்டை  உட்பட பல உதவிகளை செய்து வருகிறேன். 

இந்நிலையில் மலேசிய மக்கள் நாளை பொங்கல் விழாவை கொண்டாடவுள்ளனர்.

இதனை முன்னிட்டு இவ்வாட்டாரத்தைச் சேர்ந்த 1,600 இந்த உதவிகள் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார்.

இதனிடையே சிலாங்கூர் மாநிலத்தில் மக்களுக்கு என 43 நலத் திட்டங்கள்  இருந்தன.

அவற்றின் எண்ணிக்கை இவ்வாண்டில் இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

பெடுலி சேஹாட், சிலாங்கூர் பிள்ளைகளின் கல்விக்கான இல்திஸாம் , குழந்தை பிறந்தால் அதற்கான காப்புறுதி என அடுக்கிக் கொண்டே போகலாம். 

இந்த திட்டங்கள் மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது.

அதே வேளையில் மக்களும் இந்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
 
இதனிடையே மக்களுக்கு பொங்கல் பானை வழங்குவதற்கு பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியென் சுங், பெட்டாலிங் ஜெயா தொகுதி கெஅடிலான் தலைவர் ஹீ லொய் சியாங், ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஃபாமி ஙா, ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இந்திய சமூகத் தலைவர் முத்துசாமி, தாமான் மேடான் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹலிமி அபு பாக்கார், மாநகர் மன்ற உறுப்பினர்கள் நோரா ஆகியோர் உதவிகளை வழங்கினர்.

இவ்வேளையில் அவர்களுக்கு நன்றி என்று அசோகன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset