நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாழைப்பழம் திருடிய ஆடவர் 10 நாட்கள்  சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை

மூவார்:

வாழைப்பழம் திருடிய ஆடவர் 10 நாட்கள்  சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

ஒரு பண்ணையில் இருந்து வாழைப்பழக் குலையைத் திருடியதற்காக சம்பந்தப்பட்ட ஆடவருக்கு ஆரம்பத்தில்  மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆதாரங்களின்படி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தண்டனையை இன்று மூவார் உயர் நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இது பத்தாவது நாள். 

10 நாள் சிறைத்தண்டனை செய்யப்பட்ட குற்றத்திற்கு போதுமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்று நீதிபதி கூறினார்.

இதன் அடிப்படையில் 10 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.-

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset