நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கும்பமேளா தொடங்கியது: 400 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டுள்ளனர்

உத்தரப் பிரதேசம்:

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் இன்று கும்பமேளா தொடங்கியுள்ளது.

அதில் 400 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது உலகிலேயே ஆக அதிகமாக மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கும்ப மேளா நடைபெறுகிறது.

சூரிய உதயத்துக்கு முன்னர் பக்தர்கள் நதியில் நீராடினர்.

சூரியோதயம் நதி நீரில் பட்டு் மிக அழகான, வண்ணமயமான காட்சியை வழங்கியது.

இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொள்ள வெகுதொலைவிலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கும்பமேளா இன்று முதல் அடுத்த மாதம் 26-ஆம் தேதி வரை நடைபெறும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset