நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மதுபான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு

புது டெல்லி: 

ஜானி வாக்கர் மதுபான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ ஊழல் வழக்கைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ தெரிவித்துள்ளதாவது: ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டியாஜியோ குழுமம் தயாரிக்கும் ஜானி வாக்கர் மதுபானத்தை இந்தியாவில் வரியில்லாமல் இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு 2005-இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்த நிறுவனத்துக்கு இந்திய வணிகத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தடையை நீக்க உதவுமாறு கார்த்தி சிதம்பரத்தை டியாஜியோ குழுமம் அணுகியதாகவும், அதற்காக  15,000 டாலரை கார்த்தி சிதம்பரம் ஆலோசனை கட்டணமாக பெற்றுள்ளதாகவும் சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து கார்த்தி சிதம்பரம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset