
செய்திகள் மலேசியா
மலேசியாவில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும்: டத்தோஸ்ரீ சரவணன்
சென்னை:
மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக இன்று இலங்கை முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான், நடிகர் பிரசாந்த், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுத் தலைவர் ஒண்டி ராஜா ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் இந்தப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் நடைபெறும் இப் போட்டி மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am