நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புனித நூலை அவமதித்த நபருக்கு 9 மாதச் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அலோர் காஜா: 

புனித குர்ஆன் நூலை மிதித்து, அதை இணையத்தில் பதிவேற்றம் செய்த 41 வயதுடைய அமீர் அப்துல் மாலிக் என்ற நபருக்கு அலோர் காஜா மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மஸ்ஜித் தானா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், மத நிந்தனை செய்யும் நோக்கில் இச்செயலைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, ஒருவரின் மத உணர்வுகளைப் புண்படுத்துவது உடல் ரீதியான காயத்தை விடப் பெரிய பாதிப்பைச் சமூகத்தில் ஏற்படுத்தும் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக, நற்செயல்களைச் செய்ய வேண்டிய புனிதமான ரமலான் மாதத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டது மிகவும் கவலைக்குரியது என்றும், இது கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்படும் உரிமைகளை மீறும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் இச்செயலின் தீவிரத்தைக் கருதி கடுமையான தண்டனை வழங்கக் கோரிய நிலையில், பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் மார்ச் 15-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறைத் தண்டனையை அமல்படுத்துமாறு கோரினார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி 9 மாதச் சிறைத் தண்டனையை உறுதி செய்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset