நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்களின் மகிழ்ச்சிக்கு இதுதான் ரகசியமா?: இப்சோஸ் (Ipsos) ஆய்வில் வெளியான உண்மைகள்

ஜொகூர் பாரு: 

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்த போதிலும், மலேசியர்கள் தொடர்ந்து வலுவான மகிழ்ச்சி நிலையை வெளிப்படுத்துகின்றனர் என்று உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இப்ஸோஸ் (Ipsos) தெரிவித்துள்ளது.

அதன் கண்டுபிடிப்புகளின்படி, மலேசியாவில் மகிழ்ச்சி குறியீட்டு மதிப்பெண்கள் இந்த ஆண்டு 5% அதிகரித்துள்ளன. இது உலகளாவிய அளவில் மகிழ்ச்சியான சந்தைகளின் பட்டியலில் நாட்டை இணைப்பதுடன், அதன் மக்களிடையே ஒரு பொதுவான நேர்மறையான கண்ணோட்டத்தையும் பிரதிபலிக்கிறது.

சிங்கப்பூர் தவிர, பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இதே போன்ற அதிகரிப்புகள் காணப்படுகின்றன. உலகளவில் இந்தோனேசியா மிக உயர்ந்த மகிழ்ச்சி நிலையைப் பதிவு செய்துள்ளது.

ஜப்பானிலும் தென் கொரியாவிலும் மகிழ்ச்சி மதிப்பெண்கள் அதிகரித்திருந்தாலும், இந்தச் சந்தைகளில் உள்ள நிலைகள் உலக சராசரியை விடவும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை விடவும் குறைவாகவே உள்ளன.

இப்ஸோஸ் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் அருண் மேனன், மலேசியாவின் மகிழ்ச்சிக்கு நெருங்கிய உறவுகளும் அர்த்தமுள்ள சமூகத் தொடர்புகளும் மையமாக இருப்பதாகக் கூறினார்.

"தாம் மதிக்கப்படுவதாகவும், நேசிக்கப்படுவதாகவும் உணர்வது மகிழ்ச்சியின் வலிமையான உந்துசக்தியாக வெளிவந்துள்ளது. அதைத் தொடர்ந்து குடும்பம், குழந்தைகளுடனான உறவுகள் மகிழ்ச்சிக்குப் பங்களிக்கின்றன. இது, நல்வாழ்வை வடிவமைப்பதில் சமூகம், அதனுடன் தொடர்பு கொள்வதன் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

மேலும், 10 மலேசியர்களில் குறைந்தது மூவர், தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்வது வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஆதாரங்களில் ஒன்றாகும் என்று நம்புவதாகவும் இந்தக் கண்டுபிடிப்புகள் காட்டின. இது வாழ்க்கை அனுபவம், மகிழ்ச்சி குறித்த ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தைக் குறிக்கிறது.

தனிப்பட்ட நிதி காரணிகளும் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்கிறார்கள் என்பதைப் பாதிக்கின்றன என்றும், இது உலகம் முழுவதும் மகிழ்ச்சியின்மைக்கான முக்கிய காரணமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

"மேலும், 87% உயர் வருமான மலேசியர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் என்றும் குறைந்த வருமானக் குழுக்களிடையே மகிழ்ச்சியின்மை மிகவும் பொதுவானது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கண்டுபிடிப்புகள், மலேசியர்கள் தனிப்பட்ட நிதிநிலை குறித்த உலகளாவிய கவலைகளைப் பகிர்ந்து கொண்டாலும், வலுவான சமூக இணைப்புகளும் ஆதரவான உறவுகளும் நல்வாழ்வின் முக்கியத் தூண்களாகத் திகழ்கின்றன என்பதைக் காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.

"நிதி அழுத்தங்கள் வந்து போகும் போது, இந்தச் சமூக அடித்தளங்கள் மலேசியர்களுக்கு மீள்திறனின் ஒரு முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றன," என்றும் அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset