செய்திகள் மலேசியா
பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட நான்கு பேருக்கு தலா RM750 அபராதம்
பத்து பாஹாட்:
கேளிக்கை விடுதி ஒன்றில் மதுபோதையில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட நான்கு நபர்களுக்கு, தலா 750 ரிங்கிட் அபராதம் விதித்து மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஓங் நை சியாங் (39),சீ ரோங் (29), ஓங் போ ஹெங் (31), டெர் ஐக் சியோங் (32) ஆகிய நால்வரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.
கடந்த மார்ச் 16-ஆம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில், தாமான் ஃப்ளோராவில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இந்த நால்வரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 160-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒரு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் உடனடியாக அபராதத் தொகையைச் செலுத்தினர்.
பொது இடங்களில் இத்தகைய ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆறு மாதச் சிறை அல்லது 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட சட்டத்தில் இடமுள்ளது குறிப்பிடத்தக்கது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 4:09 pm
மீண்டு எழவும், ஆதரவை மீண்டும் பெறவும் அம்னோவுக்கு வலுவான அடித்தளம் உள்ளது: கைரி
March 19, 2026, 4:07 pm
ஜம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டது; சட்ட விதிகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டது: ஐஜிபி
March 19, 2026, 4:03 pm
மலேசியர்களின் மகிழ்ச்சிக்கு இதுதான் ரகசியமா?: இப்சோஸ் (Ipsos) ஆய்வில் வெளியான உண்மைகள்
March 19, 2026, 3:58 pm
சட்டவிரோதக் கோயில்கள் விவகாரத்தில் இனவாதத் தீயைப் பரப்பாதீர்கள்: ஐஜிபி
March 19, 2026, 3:55 pm
புனித நூலை அவமதித்த நபருக்கு 9 மாதச் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
March 19, 2026, 1:44 pm
பெருநாள் காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மாமன்னர் வலியுறுத்து
March 19, 2026, 12:52 pm
