நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீ விபத்தில் சேதமடைந்த ஆயர்தாவார் தோட்ட தமிழ்ப்பள்ளியை துணையமைச்சர் சரஸ்வதி பார்வையிட்டார்

ஆயர்தாவார்:

ஆயர்தாவார் தோட்ட தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதி அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது.

சேதமடைந்த இப் பள்ளி கட்டடத்தை தேசிய ஒருமைப்பட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இன்று நேரடியாக பார்வையிட்டார்.

இன்று மதியம் சுமார் 1 மணி அளவில் அப்பள்ளிக்கு அவர் வருகை தந்தார்.  

பின் பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்பள்ளியில் நிலவரம் குறித்து மாநில அரசிடம் ஆலோசனை பெறப்படும்.

அதன் பின் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவனேசனுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட கல்வி இலாகா, கல்வியமைச்சு, மாநில அரசாங்கம் ஆகியவற்றின் அடுத்த கட்ட நடவடிக்கை வரும் வரை, எந்த ஓர் அறிவிப்பும் செய்ய முடியாது என்று துணையமைச்சர் சரஸ்வதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset