நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தில்லி பேரவைத் தேர்தலில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்

புது டெல்லி:

வரும் பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் காஙக்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) ஆகியவை ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே களம் காண்கின்றன.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் சேர்ந்த போட்டியிட்ட ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பாஜக. காங்கிரஸ் கட்சிகள் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக குற்றம்சாட்டி வருகிறது.

இந்தநிலையில், சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணமூல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்று ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஆட்சி செய்தது.

ஆனால், கடந்த 2 சட்டப்பேரவை தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

பாஜகவும் கடந்த 26 ஆண்டுகளாக தில்லியில் ஆட்சியில் அமரவில்லை. இதனால் நடப்பு தேர்தல்  ஆட்சியை தக்க வைப்பதில் ஆம் ஆத்மியும், பலத்தை நிரூபிக்க காங்கிரஸும், வரலாற்றில் இடம்பெற பாஜகவும் திட்டங்களை வகுத்து பிரச்சாரம் செய்து வருகின்றன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset