நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியா வருகின்றார்: விஸ்மா புத்ரா

கோலாலம்பூர்:

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா இன்று வியாழக்கிழமை தொடங்கி மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமராகப் பதவியேற்ற பின் மலேசிவாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாம் என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

புத்ரா ஜெயாவில் உள்ள பெர்டானா புத்ராவில் ஜப்பானியப் பிரதமருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்படும். 

அதைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் ஒரு சந்திப்பு கூட்டம் நடைபெறும்.

அன்வரும் இஷிபாவும் மலேசியா-ஜப்பான் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை, குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, மனிதவள மேம்பாடு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு போன்ற துறைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கின் நிலைமை உட்பட பொதுவான ஆர்வமுள்ள பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர் பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று விஸ்மா புத்ரா தெரிவித்தது.

மேலும், இரு பிரதமர்களும் ஒன்றாக ஊடகச் சந்திப்பில் இணைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ பெர்டானா மதிய விருந்தும் ஜப்பானிய பிரதமருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு டிசம்பரில் இருதரப்பு உறவுகள் விரிவான மூலோபாயக் கூட்டாண்மையாக உயர்ந்ததன் மூலம் ஜப்பானுடனான மலேசியாவின் உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.

கடந்தாண்டு ஜூன் மாத நிலவரப்படி மலேசியாவில் ஜப்பானிய பங்கேற்புடன் மொத்தம் 2,821 உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 

இந்தத் திட்டங்கள் RM105.2 பில்லியன் (US$30.4 பில்லியன்) மதிப்புள்ள முதலீடுகளைக் குறிக்கின்றன.

சுமார் 344,996 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளன.

2023-ஆம் ஆண்டில் ஜப்பான் மலேசியாவின் உற்பத்தித் துறையில் நான்காவது பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராகவும், மலேசியாவின் நான்காவது பெரிய வர்த்தக பங்காளியாகவும் திகழ்ந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset