நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்னும் 10 ஆண்டுகளில் மலேசியாவில் சில்லுகள் மற்றும் கிராபிக்ஸ் செயலாக்க பொருட்களை உருவாக்க முடியும்: ரஃபிசி ரம்லி 

கோலாலம்பூர்: 

அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் மலேசியாவால் சொந்தமாக சில்லுகள் மற்றும் கிராபிக்ஸ் செயலாக்க பொருட்களை உருவாக்க முடியும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார். 

நமது தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு புதிய உயர் மதிப்புள்ள பொருளாதாரத் துறையை உருவாக்குவது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுக்கும் தரவு மையங்கள் தேவைப்படும் என்றார் அவர். 

நமது பொருளாதாரத்திற்கு இந்த முழு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு மையங்களின் பங்களிப்பு பற்றிய அரசாங்கத்தின் நீண்டகால பார்வை இதுதான் என்று அவர் 
2025 ஆம் ஆண்டு மலேசியா பொருளாதார மன்றக் கூட்டத்தில் தெரிவித்தார். 

மலேசியாவில் முதன்முதலில் சில்லுகள் மற்றும் கிராபிக்ஸ் செயலாக்க பொருட்களை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார். 

மலேசியா ஒரு உலகளாவிய தரவு மைய சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் அதை ஆதரிக்க ஆர்வமாக உள்ளது என்றும் ரஃபிஸி கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset