நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக பிரசித்திப் பெற்ற ஹம்தர்த் மருத்துவப் பொருட்கள்  மலேசிய சந்தையில் விற்கப்படவுள்ளது: அஹ்மத் ரியாஸ்

ஷாஆலம்:

உலக பிரசித்திப் பெற்ற ஹம்தர்த் மருத்துவப் பொருட்கள் மலேசிய சந்தையில் விற்கப்படவுள்ளது.

ஹார்கோர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் அஹ்மத் ரியாஸ் இதனை கூறினார்.

இந்தியாவின் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமாக ஹம்தர்த் விளங்கி வருகிறது.

கடந்த 1906ஆம் ஆண்டில் இருந்து தரமான மருத்துகளை இந்நிறுவனம் பல ஆண்டுகளாக தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகிறது.

இந்தியாவை தவிர்த்து பல நாடுகளில் இந்நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்கள் கிடைக்கும்.

இந்நிலையில் ஹம்தர்த் மருத்துவப் பொருட்கள் மலேசிய சந்தையில் விற்கப்படவுள்ளது.

சீனப் பெருநாளுக்கு பின் இப்பொருட்கள் முழுமையாக விற்பனைக்கு வரவுள்ளது.

ஹம்தர்த் நிறுவனம் எப்போதுமே ஹலாலுக்கு முன்னுரிமை வழங்கும். இதனால் அனைத்து அங்கீகாரத்தையும் பெற்று இப்பொருட்கள் மலேசிய சந்தையில் விற்கப்படவுள்ளது.

இப் பொருட்கள் நிச்சயம் மலேசியர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று அஹ்மத் ரியாஸ் கூறினார்.

ஹம்தர்த் மருத்துவப் பொருட்களின் அறிமுக விழா இன்று ஷாஆலமில் நடைபெற்றது.

மலேசியாவுக்கான இந்திய தூதரகத்தின் கல்வி, வர்த்தக பிரிவில் முதன்மை செயலாளர் விவேகானந்த் தங்கமுத்து செல்வராஜ், ஹம்தர்த் நிறுவனத்தின் ஏற்றுமதி பிரிவுத் தலைவர் பங்கஜ் பேனர்ஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset