செய்திகள் மலேசியா
லெபோ அம்பாங்கில் முறையாக லைசென்ஸ் பெற்ற அங்காடி கடைகள் உடைக்கப்பட்டன; டிபிகேஎல் உரிய பதிலை தர வேண்டும்: டத்தோ கலைவாணர்
கோலாலம்பூர்:
லெபோ அம்பாங்கில் முறையாக லைசென்ஸ் பெற்ற அங்காடி கடைகள் உடைக்கப்பட்டதற்கு டிபிகேஎல் உரிய பதிலை தர வேண்டும் என்று நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் கூறினார்.
தலைநகர் லெபோ அம்பாங்கில் சம்பந்தப்பட்ட 6 அங்காடி கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
டத்தோஶ்ரீ எட்மண்ட் சந்தாரா கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்த போது அவர்களுக்கு கடைகள் கட்டித் தரப்பட்டது.
இக் கடைக்காரர்கள் அனைவரும் டிபிகேஎல் உரிமத்தை கொண்டுள்ளனர். அவர்கள் மின்சாரம், தண்ணீர் கட்டணத்தையும் செலுத்துகின்றனர்.
இந்நிலையில் அக் கடைகளுக்கு அருகில் உள்ள கட்டடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் இக்கடைகள் அனைத்தும் எந்தவொரு முன்னறிப்பும் இல்லாமல் உடைக்கப்பட்டுள்ளது.
கடைகள் உடைக்கப்பட்டதால் இந்த வணிகர்கள் மிகப் பெரிய நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
ஆகவே பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு டிபிகேஎல் உரிய பதிலை தர வேண்டும்.
இது தொடர்பில் போலிஸ் புகாரும் செய்யப்படும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 9, 2025, 6:32 pm
மலேசியா - இந்தோனேசியா உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அன்வார், பிரபோவோவுடன் விவாதித்தனர்
January 9, 2025, 6:19 pm
அரபு நன்கொடை கடிதத்தில் மன்னர் அப்துல்லாவுடனான சந்திப்பு குறிப்பிடப்படவில்லை: நஜிப்
January 9, 2025, 5:58 pm
உலக பிரசித்திப் பெற்ற ஹம்தர்த் மருத்துவப் பொருட்கள் மலேசிய சந்தையில் விற்கப்படவுள்ளது: அஹ்மத் ரியாஸ்
January 9, 2025, 4:41 pm