நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெடிகுண்டு மிரட்டல் புரளிக்குப் பிறகு பினாங்கு எல்ஆர்டி தளத்திற்கு அருகிலுள்ள பகுதி மீண்டும் திறக்கப்பட்டது: போலிஸ்

ஜார்ஜ்டவுன்:

வெடிகுண்டு மிரட்டல் புரளிக்குப் பிறகு பினாங்கு எல்ஆர்டி தளத்திற்கு அருகிலுள்ள பகுதி  மீண்டும் திறக்கப்பட்டது.

பினாங்கு வடகிழக்கு மாவட்ட போலிஸ் தலைவர் அப்துல் ரசாக் முஹம்மது தெரிவித்தார்.

சுங்கை பினாங்கில் உள்ள பினாங்கு எல்ஆர்டி கட்டுமானத் தளத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல்  வந்தது.

இன்று காலை 9.50 மணியளவில் வெடிபொருள் போன்ற ஒரு பொருளைப் பற்றி பொதுமக்கள் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் காலை 11.50 மணியளவில் அந்த இடத்திற்கு சென்று சோதனைகளை நடத்தினர். அங்கு வெடிக்குண்டு போன்று பொருள் ஒன்று கிடந்தது.

முதல் கட்ட சோதனையில் அந்தப் பொருள் காகிதம், கம்பிகள். சிமெண்டால் ஆனது என தெரிய வந்தது.

அதில் வெடிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த இடம் பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டு, மதியம் 12.15 மணியளவில் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset