நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரபு நன்கொடை கடிதத்தில் மன்னர் அப்துல்லாவுடனான  சந்திப்பு குறிப்பிடப்படவில்லை: நஜிப்

கோலாலம்பூர்:

அரபு நன்கொடை கடிதத்தில் மன்னர் அப்துல்லாவுடனான சந்திப்பு  குறித்து குறிப்பிடப்படவில்லை.

1 எம்டிபி வழக்கு விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இவ்வாறு கூறினார்.

நன்கொடைகள் வழங்குவதாக உறுதியளித்ததாகக் கூறப்படும் நான்கு அரபு கடிதங்களில் எதிலும், மறைந்த சவூதி அரேபிய மன்னர், அப்துல்லாவுடனான 2010 ஆம் ஆண்டு  நடந்த சந்திப்பு குறிப்பிடப்படவில்லை.

கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியிடப்பட்ட கடிதத்தில் சந்திப்பு குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது குறித்து துணை அரசு வழக்கறிஞர் கமல் பஹரின் உமர் எழுப்பிய கேள்விக்கு நஜிப் இவ்வாறு பதிலளித்தார்.

அது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அவர் சந்திப்பைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை  

2010ஆம் ஆண்டு நடந்த ஒரு சந்திப்பில் மன்னர் அப்துல்லா தனக்கு நிதி உதவி செய்வதாக உறுதியளித்ததாக நஜிப் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset