நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Pra-Tahfiz ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்கு RM 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: துணைப் பிரதமர் ஸாஹித் அறிவிப்பு

புத்ராஜெயா:

சமூக மேம்பாட்டுத் துறை (KEMAS) ப்ரா-தஹ்ஃபீஸ் திட்டத்திற்காக அரசாங்கம் RM20 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

அதன் தொடக்க முயற்சிகளை வலுப்படுத்த எதிர்கால நிதியில் RM200 மில்லியனைப் பெற விரும்புவதாகவும் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தெரிவித்தார்.

இளமையில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு சீரான வளர்ச்சி சூழலை ஊக்குவிப்பதற்காக மார்க்க போதனைகளோடு கல்வியை ஒருங்கிணைப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி மத, கல்வி விழுமியங்களின் இணக்கமான கலவையுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்வதற்கான  சமூக மேம்பாட்டுத் துறையின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக உள்ளது என்று இன்று  நடைபெற்ற 2025 'பெமெர்காசான் மசாரகாத் மடானி கெமாஸ்' நிகழ்ச்சியின் போது தனது உரையில் கூறினார் ஸாஹித். 

- நந்தினி ரவி

தொடர்புடைய செய்திகள்

+ - reset