செய்திகள் மலேசியா
மன்னிப்பு வாரியக் கூட்ட அறிக்கை வெளியிடப்படாது: ஜலிஹா முஸ்ஃதபா
புத்ரா ஜெயா:
நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பான கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் அறிக்கை வெளியிடப்படாது என்று பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர்
டாக்டர் ஜலிஹா முஸ்ஃதபா தெரிவித்தார்.
கூட்ட அறிக்கை ரகசியமானவை என்றும் அதற்கான அதிகாரம் கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்திடம் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, நஜிப்பிற்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பான ஊகங்களை நிறுத்தவும், தெளிவுபடுத்தவும், அதை வெளியிட வேண்டும் என்ற பரிந்துரையை பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் அகின் நேற்று முன்வைத்தார்.
இன்று முன்னதாக, முன்னாள் பிரதமரின் மன்னிப்பு தொடர்பான கூட்டாட்சி பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று கேட்டதற்கு ஜலிஹா பின்னர் என்று கூறினார்.
பொருளாதார மன்றத்தின் தொடக்க விழாவிற்கு முன்பு அன்வார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வாரியத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஜலிஹா இந்த சுருக்கமான பதிலை மட்டுமே அளித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 9, 2025, 6:32 pm
மலேசியா - இந்தோனேசியா உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அன்வார், பிரபோவோவுடன் விவாதித்தனர்
January 9, 2025, 6:19 pm
அரபு நன்கொடை கடிதத்தில் மன்னர் அப்துல்லாவுடனான சந்திப்பு குறிப்பிடப்படவில்லை: நஜிப்
January 9, 2025, 5:58 pm