செய்திகள் மலேசியா
ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித்தொகை வழங்குதல் தொடர்பான விவாதம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது: பொருளாதார அமைச்சர் ரஃபிசி
கோலாலம்பூர்:
அரசாங்கம் ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித்தொகை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் இறுதி கட்டத்தில் உள்ளது. இதன் தொடர்பாக வரும் வாரங்களில் அமைச்சரவை ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார அமைச்சர் ரஃபிசி ராம்லி தெரிவித்தார்.
இந்த முடிவானது சரியான தகுதியுள்ள குடும்பங்களுக்கு இந்த ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது.
ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித்தொகை வழங்குவதற்காக நிகர வீட்டு செலவழிப்பு வருமானத்தின் அடிப்படையில் B40, M40, T20 ஆகியவற்றின் வகைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய பொருளாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
அமைச்சரவை முடிவு எடுத்த பிறகு, ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித்தொகை தகுதியான பெறுநர்களை அரசாங்கம் அடையாளம் காணத் தொடங்கும் என்று அவர் கூறினார்.
அமைச்சரவையிலிருந்து இந்த உதவித்தொகைக்கான அனுமதி கிடைக்கும்போது, கூடிய விரைவில் பொதுமக்களுக்கு தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
அமைச்சரவையில் கலந்துரையாடியபோது ரோன் 95 பெட்ரோல் உதவித்தொகை வழங்குவதைத் தொடர்ந்து , 21 மில்லியன் எண்ணிக்கை மலேசியர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட பாடு தரவுத்தளத்தைப் புத்ராஜெயா பயன்படுத்தும் என்று ரஃபிசி தெரிவித்தார்.
- நந்தினி ரவி
தொடர்புடைய செய்திகள்
January 9, 2025, 6:32 pm
மலேசியா - இந்தோனேசியா உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அன்வார், பிரபோவோவுடன் விவாதித்தனர்
January 9, 2025, 6:19 pm
அரபு நன்கொடை கடிதத்தில் மன்னர் அப்துல்லாவுடனான சந்திப்பு குறிப்பிடப்படவில்லை: நஜிப்
January 9, 2025, 5:58 pm
உலக பிரசித்திப் பெற்ற ஹம்தர்த் மருத்துவப் பொருட்கள் மலேசிய சந்தையில் விற்கப்படவுள்ளது: அஹ்மத் ரியாஸ்
January 9, 2025, 4:41 pm