நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேமரன் மலையில்  உள்ள தாமான் எக்கோ ரிம்பா மோசி ஃபோரஸ்ட் தற்காலிகமாக மூடப்பட்டது 

குவாந்தான் :

கேமரன் மலையில் உள்ள தாமான் எக்கோ ரிம்பா மோசி ஃபோரஸ்ட் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று பகாங் மாநில வனத்துறை  மூத்த உதவி இயக்குநர் முஹம்மத் ரஹ்மான் முஸ்தபா தெரிவித்தார். 

இந்தக் காலகட்டத்தில் ஐரா மலையில் நடைப்பயண நடவடிக்கைகளை நிறுத்துவதாக பகாங் மாநில வனத்துறை (JPNP) அறிவித்துள்ளது. 

சுற்றுலாப் பயணிகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த் அறிவிப்பைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நிலச்சரிவை அகற்றுவதற்கும், தாமான் எக்கோ ரிம்பா மோசி வனப்பகுதி, ஐரா மலைக்குச் செல்லும் சாலைகளைச் சீர்செய்வதற்கும் வனத்துறையால் நியமிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் பொறுப்பேற்பார்கள் என்று பகாங் மாநில வனத்துறை  மூத்த உதவி இயக்குநர் முஹம்மத் ரஹ்மான் முஸ்தபா கூறினார்.

சுற்றுப்பயண வழிகாட்டிகள், மலை வழிகாட்டிகள், வாகன சேவை வழங்குநர்கள் இரு இடங்களுக்கும் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து முன்பதிவுகளை ஏற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

தற்போதைய கணிக்க முடியாத வானிலை காரணமாக பொது பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தாமான் எக்கோ ரிம்பாவும் ஐரா மலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் விழுந்த மரங்களை அகற்றும் காலக்கட்டதைப் பொறுத்து தாமான் எக்கோ ரிம்பா மோசி ஃபோரஸ்ட் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு மூடப்படும்.

- நந்தினி ரவி

தொடர்புடைய செய்திகள்

+ - reset