நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 100 கோடியை தாண்டியது

புது டெல்லி:

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 100 கோடியை தாண்டியது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை அரசு மருத்துவமனைகளிலும், விமானம், ரயில், கப்பல், மெட்ரோக்களிலும் அறிவிப்பு வெளியிட்டு இந்திய அரசு கொண்டாடி வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி 9 மாதங்களுக்கு பிறகு 100 கோடி தவணைகள் என்ற எண்ணிக்கையை இந்தியா எட்டி உள்ளது. கடந்த ஜூன் மாதம் சீனா 100 கோடி தடுப்பூசி தவணைகளை எட்டியது. அதன்பிறகு உலகிலேயே இந்தியாதான் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது.

இந்திய அரசின் கோவின் வலைதளத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 100 கோடியை எட்டி சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

100 கோடி கொரோனா டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset