நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிவாசலின் பாரம்பரியம் சுற்றுலாத் துறையின் விரிவான காணொளியில் சேர்க்கப்படும்: சுற்றுலா அமைச்சர்

புத்ராஜெயா:

பள்ளிவாசலின் பாரம்பரியம் சுற்றுலாத் துறையில் விரிவான காணொளியில் சேர்க்கப்படும்.

சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் இதனை தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு மலேசிய வருகைக்கான விரிவான விளம்பர வீடியோவில் பள்ளிவாசல்களின் பாரம்பரியம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்திற்கு அமைச்சு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் பள்ளிவாசலில்  கட்டிடக்கலை, பாரம்பரிய  கூறுகள் விரைவில் 2026 ஆம் ஆண்டு மலேசிய வருகைக்கான விரிவான விளம்பர வீடியோவில் சேர்க்கப்படும்.

பள்ளிவாசல் கூறுகளைக் காட்டாததால் பல தரப்பினரால் சர்ச்சைக்குள்ளான  வீடியோ, 41 வினாடிகள் நீடிக்கும் ஒரு சுருக்கமான, குறுகிய வீடியோ மட்டுமே.

மலேசியாவின் தனித்துவத்தை உள்ளடக்கிய முறையில் வெளிப்படுத்துவதே எங்கள் முக்கிய கவனம்.

மேலும் இது போன்ற ஒரு வெளியீட்டு காணொளி மிக நீளமாகவோ அல்லது விரிவாகவோ இருக்க முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அதே வேளையில் பள்ளிவாசலின் பாரம்பரியம் விரிவான காணொளியில் சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset