நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காணொளி சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது

ஜொகூர் பாரு:

ஜொகூரில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காணொளி தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது.

நேற்று மதியம் இங்குள்ள தாமான் செத்தியா இண்டாவில் உள்ள ஒரு உணவகத்தின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் சிசிடிவி வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஹெல்மெட்,  நீல நிற சட்டையுடன்  பையை ஏந்தி செல்லும்  மனிதனின் படமும் கூட வைரலானது.

30 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட ஆடவர் உணவக வளாகத்தின் முன் தனது கைத்தொலேசியை பயன்படுத்திக் கொண்டே நடந்து செல்வதைக் காண முடிந்தது. 

பின்னர், ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் அவரை அணுகினார்.

முகமூடி அணிந்த நபர் பாதிக்கப்பட்டவரை நோக்கி துப்பாக்கியால் சுடுவதையும் காண முடிந்தது. இதனால் அவர் சரிந்து விழுந்தார்.

சந்தேக நபர் பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றது கண்டறியப்பட்டது.

இதில் சுட்டுக் கொல்லப்பட்ட 40 வயது உள்ளூர் நபரின் உடலில் நான்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் அடையாளம் காணப்பட்டன.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset