நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீன் அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது: ஃபஹ்மி ஃபாட்சில்

புத்ரா ஜெயா: 

விஸ்மா டிரான்சிட் கோலாலம்பூரில் (WTKL) தங்க வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருக்கிறது என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.

தற்காப்பு அமைச்சான விஸ்மா புத்ரா எகிப்திய அரசாங்கத்துடன் நடத்திய கலந்துரையாடலைப் பற்றி அமைச்சரவைக்குத் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாலஸ்தீன அகதிகள் தாயகம் திரும்புவதற்கான விண்ணப்பங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

முன்னதாக, பாலஸ்தீன அகதிகள் கலவரத்தில் ஈடுப்பட்ட நிலையில் எந்தச் சேதமும் ஏற்படாமல் கலவரம் தீர்க்கப்பட்டது என்று அவர் கூறினார். 

மேலும், சம்மந்தப்பட்ட பாலஸ்தீன அகதிகள் மருத்துவச் சிகிச்சைகளைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மலேசிய அரசாங்கமும் தூதரகமும் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் கூடிய முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

- கௌசல்யா ரவி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset