நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார் இந்தோனேசிய அதிபர் ப்ராவோ சுபியாந்தோ 

கோலாலம்பூர்: 

இந்தோனேசிய அதிபர் ப்ராவோ சுபியாந்தோ மலேசியாவிற்கு இன்று ஜனவரி 9ஆம் தேதி அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். 

கடந்த அக்டோபர் 2024ஆம் ஆண்டு இந்தோனேசிய அதிபராக பொறுப்பேற்றது முதல் ப்ராவோ சுபியாந்தோ முதன்முறையாக மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார் 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் ப்ராவோ சுபியாந்தோ சந்திப்பு நடத்துவார் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது 

இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பன்முக வர்த்தக, கூட்டு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இவ்வாண்டு மலேசியா ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்குத் தலைமை தாங்கியுள்ளதால் ஆசியான் குறித்த பார்வைகளும் அதனை வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் தங்களின் பங்களிப்பினை வழங்குவார்கள் என்று வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset