செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் வரலாற்றுத் தேர்வுத் தாள் கசிவா?: கல்வி அமைச்சு மறுப்பு
கோலாலம்பூர்:
2024-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் வரலாற்றுப் பாடம் தேர்வுத் தாள் கசிந்ததாகக் கூறப்படும் தகவலை கல்வியமைச்சகம் மறுத்துள்ளது.
கல்வியமைச்சகம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் பதிவுகள் இணையத்தளத்தில் பரவியதைத் தொடர்ந்து, முழுமையான விசாரணையைத் தொடங்கியதாகக் கல்வியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பரப்பப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களில், தேர்வுக்கான கணிக்கப்பட்ட வரலாற்றுப் பாடப்புத்தகத்தின் தலைப்புகளின் பட்டியல் மட்டுமே இருந்தது.
எனவே, தேர்வுத் தாள் கசிவுகளை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் நடைமுறைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி கசிவின் வரையறையை இந்தக் குற்றச்சாட்டுகள் பூர்த்தி செய்யவில்லை.
மேலும் அவை தேர்வு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவதில்லை.
இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், அனைத்து எஸ்பிஎம் தேர்வர்களும் தங்கள் தேர்வுகளைத் தொடரும்போது அமைதியாகவும் கவனம் செலுத்தவும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 9, 2025, 6:32 pm
மலேசியா - இந்தோனேசியா உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அன்வார், பிரபோவோவுடன் விவாதித்தனர்
January 9, 2025, 6:19 pm
அரபு நன்கொடை கடிதத்தில் மன்னர் அப்துல்லாவுடனான சந்திப்பு குறிப்பிடப்படவில்லை: நஜிப்
January 9, 2025, 5:58 pm
உலக பிரசித்திப் பெற்ற ஹம்தர்த் மருத்துவப் பொருட்கள் மலேசிய சந்தையில் விற்கப்படவுள்ளது: அஹ்மத் ரியாஸ்
January 9, 2025, 4:41 pm