நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எது உண்மை எது பொய் என்று என்னால் சொல்ல முடியும்: நஜிப்

கோலாலம்பூர்:

பொதுவாக என்னால் உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும்.

ஆனால் தவறாக வழிநடத்தும் போது தவறு செய்யலாம்.

கடந்த  2009 முதல் 2018 வரை தேசிய நிர்வாகத்தை வழிநடத்திய போது முடிவெடுக்கும் செயல்முறை குறித்து புத்ராஜெயாவில் இன்று உயர் நீதிமன்ற விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இதனை கூறினார்.

நஜிப்பிற்கு எதிரான 2.27 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி நிதி சம்பந்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி வழக்கு விசாரணையின் போது,  துணை அரசு வழக்கறிஞர் அஹ்மத் அக்ரம் காரிப் உண்மை, பொய்யை பிரித்தறியக்கூடிய புத்திசாலியான நபரா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு நஜிப் ஆம் என்று பதிலளித்தார்.

ஆனால் சில சமயங்களில் உண்மைகள் சரியான முறையில் முன்வைக்கப்படாவிட்டால் அல்லது உங்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டு, தவறாக வழிநடத்தப்பட்டால், நீங்கள் தவறு செய்யலாம் என்று நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேராவிடம் அவர் கூறினார்.

மலேசியாவின் முதல் தலைவராக இருக்கும் வரை நஜிப் தனது அனுபவம், கல்வி, நிபுணத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஏமாற்றுவது மிகவும் கடினம் என்று அஹ்மத் அக்ரம் குறிப்பிட்டார்.

இருப்பினும், அரசுத் தரப்பு அறிக்கையை நஜிப் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset