நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் 11 நாடுகளுக்கு சென்றுவர இந்தியா ஒப்பந்தம்

புது டெல்லி:

கொரோனா தடுப்பூசிகளை  முழுமையாக செலுத்திக்கொண்ட பயணிகள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி 11 நாடுகளுக்கு சென்றுவரும் வகையில், இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்காக  பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதலையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பெலாரஸ், லெபனான், ஆர்மெனியா, உக்ரைன், பெல்ஜியம், ஹங்கேரி, செர்பியா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அந்தந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது உலக சுகாதார அமைப்பு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தியிருந்தால்,  எந்தவித கட்டுபாடுகளும் இன்றி விமான நிலையத்திலிருந்து செல்ல முடியும். கொரோனா பரிசோதனைக்கு உட்படவோ அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கவோ தேவையில்லை.

மேலும், கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான விரைவுப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்தியா வந்திறங்கிய நாளிலிருந்து 14 நாள்களுக்கு தாங்களாகவே உடல் நிலையை சுய கண்காணிப்பு செய்துகொள்ள வேண்டும்.

Passengers travelling to and from Chennai airport will be allowed to hire  cabs: AAI | The News Minute

அதுபோல, தடுப்பூசி செலுத்தாத அல்லது முழு தவணைகளையும் செலுத்திக் கொள்ளாத சர்வதேச பயணிகள் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளை அளிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர்.

அவர்கள் முதல் 7 நாள்கள் கட்டாய வீட்டுத் தனிப்படுத்தலில் இருக்க வேண்டும். பின்னர், 8ஆம் நாளில் அவர்களுக்கு மறு பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போது, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தால், அடுத்த 7 நாள்களுக்கு அவர்களின் உடல்நிலையை சுய கண்காணிப்பு செய்துகொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா, பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மோரீஷஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கூடுதல் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியது புதிய வழிகாட்டுதலில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset