நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்தது இந்தியா

புது டெல்லி:

இந்தியாவில் உயர்கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு e student visa, e student x visa என்ற 2 சிறப்புப் பிரிவு விசாக்களை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதை  study in india  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம், e student visa  வைத்திருக்கும் நபர்களைச் சார்ந்தவர்களுக்கு e student x visa விசா வழங்கப்படவுள்ளது.

முழுநேரம், பகுதிநேரம், இளநிலை, முதுநிலை, PHD ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தக விசா வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகள் வரை இந்த விசா செல்லுபடியாகும். என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தில் 600க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இணைந்துள்ளன. இந்தக் கல்லூரிகளில் உள்ள 8,000 படிப்புகளில் வெளிநாட்டு மாணவர்கள் சேர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset