செய்திகள் இந்தியா
இந்தியாவுக்கு வந்து சென்ற ஈரான் கப்பலை அமெரிக்க அழித்துள்ளது; அதிலிருந்த 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; வளைகுடா மோதல் இந்தியாவின் அருகே வந்த பிறகும் பிரதமா் மோடி வாய் திறக்க மறுக்கிறார்: ராகுல் காந்தி கடும் விமா்சனம்
புதுடெல்லி:
வளைகுடா மோதல் இந்தியாவின் அருகே வந்த பிறகும் பிரதமா் மோடி பேச மறுக்கிறாா்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், இந்தியா ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற ‘மிலன்’ கடற்படை பயிற்சியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் போா்க் கப்பலை இலங்கை அருகே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் புதன்கிழமை தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரானியா்கள் 80-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, எக்ஸ் பக்கத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஹோா்முஸ் நீரிணை வழியாகத்தான் இந்தியா 40 சதவீத கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. எல்பிஜி, எல்என்ஜி நிலவரம் இன்னும் மோசமாக உள்ளது.
மேற்காசிய மோதல் நமது அருகே வந்துவிட்டது. இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமா் மோடி இதுவரை வாய் திறந்து எதுவும் பேசவில்லை. இதுபோன்ற சூழலில் இந்தியாவை வழிநடத்த உறுதியான நபா் தேவை. ஆனால், அதற்குப் பதிலாக இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை சரணாகதி அடைய வைத்தவா்தான், தற்போது பிரதமராக உள்ளாா்’ எனத் தெரிவித்துள்ளாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
