நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அஜ்மீர் தர்காவுக்கு மோடி போர்வை அனுப்புவதற்கு எதிர்ப்பு

புது டெல்லி:

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி அளித்த புனிதப் போர்வை அனுப்பியதற்கு ஹிந்து சேனை தலைவர் விஷ்ணு குப்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் தர்கா உள்ள இடத்தில் முன்பு சிவன் கோயில் இருந்தது என்றும், இதுகுறித்து அங்கு ஆய்வு நடத்த வேண்டும் என்றும் ஹிந்து சேனை தலைவர் விஷ்ணு குப்தா வழக்கு தொடுத்துள்ளார்.

எனினும், வழக்கம்போல் பிரதமர் மோடி நிகழாண்டு அஜ்மீர் காஜா கரீப் நவாஸ் சிஸ்தி தர்காவின் உருஸ் விழாவுக்கு புனிதப் போர்வையை தில்லியில் இருந்தபடி அளித்தார்.

இது தொடர்பாக ஹைதராபாதில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில்,
மசூதிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை அரசு பாதுகாக்கும் என்பதே போர்வை வழங்குவதன் அர்த்தம். ஆனால் பாஜகவும், சங்க பரிவார் அமைப்பினரும் சில மசூதிகள் உள்ள இடங்களில் முன்பு ஹிந்து கோயில்கள் இருந்ததாகவும், அதுதொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இதுபோல மசூதி, தர்கா உள்ள இடங்களுக்கு உரிமை கோருவதை முடிவுக்குக் கொண்டுவருவதே அரசின் உண்மையான பணி.

பிரதமர் நினைத்தால், இவை அனைத்தையும் நிறுத்த முடியும். அதைச் செய்யாதபோது தர்காவுக்கு பிரதமர் போர்வை அனுப்புவதால், எந்தப் பயனும் இல்லை என்றார். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset