நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சன்வே லாகூன் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 4 பேர் மாண்ட நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட 2 பேர் உயிருக்கு போராடுகிறார்கள்

பெட்டாலிங் ஜெயா: 

சன்வே லாகூனில் நடந்த Pinkfish Festival புத்தாண்டு நிகழ்ச்சியில் 4 பேர் மாண்ட நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட 2 பேருக்குச் சுயநினைவு திரும்பியிருக்கிறது.

எனினும் அவர்களின் நிலை படுமோசமாக இருக்கிறது என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அவர்கள் உயிருக்குப் போராடி வருகிறார்கள்.

அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்னும் உள்ளனர்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென்று 4 பேர் மாண்டனர்.

இதற்கிடையில் சம்பவம் தொடர்பில் காவல்துறை 15 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், பாதிக்கப்பட்ட 7 பேரின் நண்பர்கள் ஆகியோரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.

சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற Sunway Lagoon கேளிக்கைப் பூங்காவில் Pinkfish Festival பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. 

அதில் கலந்துகொண்ட 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நால்வரும் நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் திடீரென்று உயிரிழந்தனர்.

மாண்ட நால்வரின் உடல்களிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூவரின் உடல்களிலும் ecstasy எனும் போதைப்பொருள் இருந்தது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset