நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பேரணியை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: எம்.குலசேகரன்

ஈப்போ: 

வரும் 6ஆம் தேதி, மேனாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மேல் முறையீட்டை ஆதரிக்கும் பொருட்டு பேரணி நடத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். மாட்சிமை தங்கிய பேரரசரின் சொல்லை நாம் மதிக்க வேண்டும் என்று  மலேசிய சட்டத்துறை துணையமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

யார் சிறையில் இருந்தாலும் அரசு மன்னிப்பை மாமன்னர் என்ற அடிப் படையில் அவரிடம்தான் முறையிட வேண்டும். அதனை பரிசீலனை செய்து தக்க நடவடிக்கையை அவர்கள்தாம் செய்வார்கள். ஆகையால், இம்மாதிரியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் முறைப்படி கடிதம் வாயிலாக தொடர்புக்கொள்ளும்படி மாமன்னரின் ஆலோசனையை அவர் சுட்டிக்காட்டினார்.

அதைத் தவிர, மாற்று வழிகளை பையாள்வது ஏற்புடையதல்ல. இதனால் பல தரப்பினர் பல வகையான பாதிப்புகளை எதிர்நோக்கலாம். சாலை பேரணி போன்ற நடவடிக்கைகள் தவிர்க்க பட வேண்டிய ஒன்றாகும் என்றும்  மாமன்னரின் அறிவுரையை பொதுமக்கள் பின்பற்றி நடப்பது சிறந்த பண்புநலனாகும் என்று குலா குறிப்பிட்டார்.

ஆகையால், பொதுமக்கள் மாமன்னரின் ஆலோசனையை பின்பற்றி செயல்படுவது சிறந்த பண்பாகும். இந்நாட்டு குடிமக்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் பேர ரசரின் அறுவுரை அல்லது ஆலோசனையை பின்பற்றி நடப்பது அவருக்கு நம் வழங்கும் மரியாதையாகும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் வலியுறுத்தினார்.

இங்குள்ள அரினா கெப்பாயாங் மக்களில் சுமார் 60 குடும்பத்தார் வெள்ளத்தால் கடந்த டிசம்பரில் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவுப்பொருட்களும்  பணமுடிப்பும் வழங்கிய போது  அவர் தெரிவித்தார். 

இந்த உதவிகள் தாசேக், கம்போங் தாசேக் வட்டாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

இந்த அரினா கெபாயாங் வட்டாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவ்வேளையில் உணவு, இதர உதவிகளை பேராக் நகைக்கடை சங்க தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் குடும்பத்தார் உதவிகள் செய்தனர். அவருக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார் எம்.குலா.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset