நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

180 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் சோதனை

புது டெல்லி:

புதிதாக அறிமுகமாக உள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது.

இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், சொகுசு படுக்கைகள், வைஃபை வசதி உள்பட பல்வேறு வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாத இறுதிவரை ரயிலின் சோதனை ஓட்டங்கள் தொடரும். அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் முன்னிலையில் ரயிலை உச்சவேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்படும். ரயிலுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு, பயணிகளின் சேவைக்கு பயன்படுத்தப்படும்  என்று ரயில்வே அறிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset