நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொறாமையால் பெண் கொலை : சந்தேக நபர் கைது

பெட்டாலிங் ஜெயா:

கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி பூச்சோங் தாமன் மவார் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண்ணைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக மூன்றாவது சந்தேகவர் கைது செய்யப்பட்டார்.

இதன் தொடர்பில் வங்காளதேசத்தை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான சந்தேக நபர் புத்ராஜெயாவில் நேற்று மாலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக செர்டாங் போலீஸ் தலைவர் எ.அன்பழகன் கூறினார்.

ஆரம்ப விசாரணைகளின்படி, சந்தேகவர் பாதிக்கப்பட்டவரின் அறிமுகமானவர் என்றும், பொறாமையால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் என்று அவர் கூறினார்.

சந்தேக நபர் ஜனவரி 10ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்படுவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த வழக்கு  தண்டனை சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் கொலை குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 முறை பிரம்படி வழங்கவும் இச்சட்டம் வழிவகை செய்கின்றது.

மலிவு விலை தங்கும் விடுதி அறையில் இந்தோனேசிய பெண் சடலமாக இருப்பது போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக 2 இந்தோனேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset