நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து சமயத்திற்கு என புளூபிரிண்டை தயார் செய்வதே மஹிமாவின் முதன்மை இலக்கு: டத்தோ சிவக்குமார்

கோலகுபுபாரு:

இந்து சமயத்திற்கு என புளூபிரிண்டை எனும் திட்ட வரைவை தயார் செய்வதே மஹிமாவின் முதன்மை இலக்காகும்.

மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலய, இயங்களின் ஒருங்கிணைப்பு பேரவை டான்ஶ்ரீ நடராஜா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டில் உள்ள இந்து ஆலயங்களையும் இயங்களையும் ஒருகுடையின் கீழ் இணைக்க வேண்டும் என்பது மஹிமாவின் முக்கிய நோக்கமாகும்.

தற்போது மஹிமாவின் தலைவராக நான் பொறுப்பேற்றதில் இருந்து நாடு தழுவிய நிலையில் உள்ள ஆலய நிர்வாகங்கள், இந்து அமைப்புகளுடன் சந்திப்புகளை நடத்தி வருகிறேன்.

மஹிமாவை வலுப்படுத்துவது இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது. 

அதே வேளையில் சமய, சமூகத்தில் உள்ள பிரச்சினைகள், சவால்களும் கண்டறியப்பட்டு வருகிறது.

இதனை அடிபடையாக கொண்டு சிறப்பு புளூபிரிண்ட் ஒன்று தயார் செய்யபடவுள்ளது.

இது இந்து சமயம், சமூக பிரச்சினைகளுக்கு தீரவு காண்பதற்கான வழிகாட்டலாக இருக்கும்.

குறிப்பாக இதற்கு முன் இதுபோன்ற புளூபிரிண்ட் தயார் செய்தது இல்லை என்று  கோலா குபு பாருவில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலயத்தில் இன்று சந்திப்பு கூட்டத்திற்கு பின் டத்தோ சிவக்குமார் கூறினார்.

இக்கூட்டத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து இந்து ஆலய, அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset