நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் உயிரிழப்புகள்: இசை விழா வழிகாட்டலில் மறு ஆய்வு செய்யப்படவுள்ளது

ஷாஆலம்: 

பிங்க்பிஷ் 2025-ஆம் ஆண்டு புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் நான்கு பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, மெத்தமாம்பெட்டமைன் போன்ற போதைப்பொருள் சார்ந்த மரணங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்காக சிலாங்கூர் அரசு இசை விழா வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்ய உள்ளது.

மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, உள்ளூராட்சி,  சுற்றுலா துறையின் ஆட்சிக்குழு உறுப்பினரான என் சூ லிம் உடன் இந்த விவகாரத்தை கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

“சமீபத்திய துயரமான மரணங்கள் தொடர்பில் மாநில அரசு கவலை கொள்கின்றது. ஆனால், அதிகாரிகள் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டிருப்பதிலும், நிகழ்ச்சிகளுக்கான அனுமதி கடிதங்களைத் தற்காலிகமாக நிறுத்திய போலீசின் முடிவை வரவேற்பதாகவும் ,” நஜ்வான் ஹலிமி கூறினார்.

“இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதை தடுப்பதே எங்கள் நோக்கம்.”

பந்தாய் ரேமிஸ், ஜெராம் பகுதியில் நடைபெற்ற சிலாங்கூர் மடானி இளைஞர் கண்காட்சி 2024 நிகழ்ச்சியின் மூன்றாவது தொடரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள், தடைசெய்யப்பட்ட பொருள்கள் நிகழ்வில் கொண்டு வரப்படுவதை அல்லது பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தங்கள் நடைமுறைகளை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக நஜ்வான் கூறினார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset