செய்திகள் மலேசியா
நஜிப் ஆதரவு பேரணியை தொடர்வோம் என்பது பாஸ் கட்சியின் அரசியல் சித்து விளையாட்டு: குவான் எங்
ஜார்ஜ்டவுன்:
நஜிப் ஆதரவு பேரணியை தொடர்வோம் என்பது பாஸ் கட்சியின் அரசியல் சித்து விளையாட்டாகும்.
ஜசெக தலைவர் லிம் குவான் எங் இதனை கூறினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை புத்ராஜெயாவில் மாபெரும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அப்பேரணியில் இருந்து அம்னோ விலகிக் கொண்டது.
இருந்த போதிலும் அப்பேரணி தொடரும் என பாஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.
மாட்சிமை தங்கிய மாமன்னரின் சிறப்புரிமைகள் குறித்த அறிக்கையை இஸ்தானா நெகாரா நேற்று வெளியிட்டது.
இதனை தொடர்ந்தும் பாஸ் கட்சியின் இம்முடிவு வேடிக்கைத் தனமாக உள்ளது.
பாசாங்குத்தனமான, சந்தர்ப்பவாதக் கட்சியாக பாஸ் தற்போது திகழ்கிறது.
ஆகவே பேரணியில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 6, 2025, 7:53 pm
நஜிப் ஆதரவு கூட்ட விவகாரத்தில் ஜசெகவின் எதிர்ப்பினால் அம்னோ அடிபணிந்தது: துன் மகாதீர்
January 6, 2025, 6:47 pm
மாமன்னரின் கூடுதல் உத்தரவு வதந்தி அல்ல என்பதை நிரூப்பித்துள்ளது: அக்மால்
January 6, 2025, 6:22 pm
நஜிப்பிற்கு முழு மன்னிப்பு வழங்க வேண்டும் என மாமன்னரிடம் கருணையுடன் கோருகிறேன்: ஜாஹித்
January 6, 2025, 6:18 pm
நஜிப்புக்கு உடல் நிலை சரியில்லாததால் 1எம்டிபி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது: ஷாபி
January 6, 2025, 5:11 pm
பிரார்த்தனை கூட்டத்தை ஆலயத்தில் நடத்தாமல் வேறு எங்கு நடத்துவது?: டத்தோஸ்ரீ சரவணன்
January 6, 2025, 4:13 pm