நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டெல்லியில் அடர்பனி மூட்டம்: 100 விமான சேவைகள் தாமதம்

புதுடெல்லி: 

கடும் குளிர் காரணமாக வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று காலை அடர் பனி மூட்டம் நிலவியதால், டெல்லியில் 100 விமான சேவைகள் தாமதமாகின. வட இந்தியாவில் பல்வேறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

விமான சேவை கண்காணிப்பு இணையதளத்தின் தரவுகள் படி, டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் 60 விமானங்கள், வந்து சேர வேண்டிய 193 விமானங்கள் பனி மூட்டம் காரணமாக தாமதமாகின. ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான நிலையத்தில், அங்கிருந்து புறப்பட வேண்டிய 17 விமானங்களும், வர வேண்டிய 36 விமானங்களும் பனி மூட்டம் காரணமாக தாமதமாகின. ஒரு சர்வதேச விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடர் பனி மூட்டம் போர்வை போல இருந்ததால் டெல்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை எதிரிலிருக்கும் காட்சிகள் எதுவும் தெளிவாக தெரியவில்லை என்பதால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதேபோல், அடர் பனி மூட்டம் காரணமாக நீண்ட தூர ரயில் சேவைகள் உட்பட குறைந்தது 24 ரயில்கள் தாமதமாக வந்து செல்வதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset