நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் சைபர் மோசடி அதிகரிப்பு: அரசு எச்சரிக்கை

புது டெல்லி:

வேலையில்லாத இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், நிதித்தேவையுள்ள நபர்களை குறிவைத்து முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் சைபர் மோசடி பெருமளவில் நடைபெற்று வருவதாக ஒன்றிய அரசின்  உள்துறை எச்சரித்துள்ளது.

இதற்காக கூகுள் சேவையையே பெரும்பாலான குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர் என்றும் இந்திய அரசு எச்சரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து செயல்படும் அவர்கள் கிரிப்டோகரன்சி அல்லது வேறு சில லாபகரமான திட்டங்களில் முதலீடு செய்யுமாறு கூகுள் விளம்பரங்கள் மூலம் அப்பாவி பொதுமக்களை மூளை சலவை செய்கின்றனர்.

இதன் இறுதியில் அப்பாவி மக்கள் பணத்தை இழக்கின்றனர்.

ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களின் வெளியாகும் இதுபோன்ற மோசடி விளம்பரங்களை அடையாளம் கண்டு அதனை அகற்ற  நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதேபோல், வாட்ஸ்ஆப் மூலம் மோசடி நடைபெற்றதாக 14,746 புகார்களும், டெலிகிராம் மூலம் 7,651 புகார்களும், இன்ஸ்டாகிராம் மூலம் 7,152 புகார்களும், ஃபேஸ்புக் மூலம் 7,051 புகார்களும், யூடியூப் மூலம் 1,135 புகார்களும் பதிவாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset